News January 7, 2025
எங்ககிட்ட NOC இருக்கு: நயன் தரப்பு விளக்கம்

‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள சிவாஜி புரொடெக்ஷன் தயாரிப்பு நிறுவனம் NOC கொடுத்துள்ளதாக நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக நயன்தாராவிடம் ₹5 கோடி நஷ்டஈடு கேட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், உரிய அனுமதி பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 17, 2026
விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?
News January 17, 2026
நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்: EPS

MGR பிறந்தநாளான இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சபதம் எடுக்க EPS வலியுறுத்தியுள்ளார். ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்ற MGR பாடலை மேற்கோள் காட்டி, அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, வரும் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க சபதம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


