News January 7, 2025
அரிஸ்டாட்டிலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்!

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன். *அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது. *புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள். *அமைதி போரை விட மிகவும் கடினமானது. *இயற்கை ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது. *உடலை குணப்படுத்த முதலில் மனதைக் குணப்படுத்த வேண்டும்.
Similar News
News January 16, 2026
ஈரான் அரசு கவிழ்ந்தால் இந்தியாவிற்கு பாதிப்பா?

ஈரானில் எந்நேரமும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும். ஏற்கனவே ஆப்கன்-மத்திய ஆசியா-ஐரோப்பா செல்லும் நில வழிப்பாதையை PAK மூடி வைத்துள்ளது. இதனிடையே ஈரானில் பல ஆயிரம் கோடியில் சபஹார் துறைமுகத்தை இந்தியா அமைத்து வருகிறது. எனவே ஷியா ஆட்சியாளர்களின் ஈரான் அரசு கவிழ்ந்தால், அது சன்னி முஸ்லிம்களின் PAK-கிற்கு பலன் தரும்.
News January 16, 2026
₹85 கோடிக்கு சூர்யா படத்தை வாங்கிய நெட்ஃபிலிக்ஸ்

‘சூர்யா 46’ படத்தின் ஓடிடி உரிமத்தை ₹85 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கடைசி படமான ‘ரெட்ரோ’, பாக்ஸ் ஆஃபிசில் சரியாக வசூல் செய்யவில்லை என்றாலும், அவரது கரியரில் அதிக தொகைக்கு விற்பனையான படமாக இது அமைந்துள்ளது. மேலும், ‘லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்குவதும் இவ்வளவு தொகைக்கு விற்பனையானதற்கு ஒரு காரணமாக உள்ளது.
News January 16, 2026
நாட்டின் நிதி தலைநகரத்தை கைப்பற்றும் பாஜக

மும்பை நகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி தான் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக + சிவசேனா (ஷிண்டே) 131-151, உத்தவ் + ராஜ் தாக்கரே கூட்டணி 58-68, காங்கிரஸ் 12-16 இடங்களையும் கைப்பற்றும் என Axis My India கணித்துள்ளது. 227 வார்டுகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட உள்ளன.


