News January 6, 2025
‘அமரன்’ இயக்குநரின் அடுத்த Pan India படம்!

அமரன் படத்தின் வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மீது பான் இந்தியா அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான T-Series உடன் கை கோர்க்கிறார் ராஜ்குமார். இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார் வெளியிட்டுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் D55 பட வேலைகளில் உள்ளார் ராஜ்குமார். T-Series உடனான படம் Pan India படமாக உருவாகவுள்ளது. ஹீரோ யார் என விவரம் வெளியாகவில்லை.
Similar News
News January 22, 2026
இபிஎஸ்-ஐ ஆதரிக்க சசிகலா முடிவு!

அதிமுகவில் நடந்து வந்த ஒருங்கிணைப்பு, ஒற்றைத் தலைமை, துரோகி என்ற சண்டைகள் எல்லாம் தற்போது பங்காளி சண்டை எனப் பதம் மாறியுள்ளன. நேரடியாக ஒருங்கிணைப்பு இல்லாவிட்டாலும், திமுகவுக்கு எதிரான வெற்றி என்ற நிலைப்பாட்டுடன் இபிஎஸ்-க்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை TTV எடுத்துள்ளார். சசிகலாவும் அதே மனநிலையில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களிடம் இது குறித்து நேற்று பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 22, 2026
சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் புதிய படம்!

‘அரசன்’படத்தில் பிஸியாக உள்ள சிம்புவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். ‘அரசன்’ படம் முடிந்த கையோடு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடம் ‘அரசன்’ அடுத்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் 2 முக்கியமான படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
News January 22, 2026
NDA வெற்றிக் கூட்டணியாக மாறி வருகிறது: வானதி

தமிழகத்திற்கு PM மோடி வருகிறபோது கூடுகின்ற கூட்டம் என்பது TN-ன் ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுவதாக இருக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் CM வேட்பாளரான EPS வீட்டில் இன்று நடந்த காலை விருந்தில் அவர் பங்கேற்றார். அப்போது, ஒவ்வொரு நாளும் NDA கூட்டணிக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது என்றும், TN-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் வானதி தெரிவித்துள்ளார்.


