News January 6, 2025

ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று (திங்கட்கிழமை) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. *ஷேர்*

Similar News

News February 16, 2026

விருதுநகர்: இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

விருதுநகர் மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..

1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க

2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.

3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.

4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.

இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 16, 2026

சிவகாசி: பட்டாசுகளை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

image

சிவகாசி அருகே போலீஸ் ரோந்தில் பாரைப்பட்டியில் சஞ்சீவ்பாபு (62) ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பாதுகாப்பின்றி பதுக்கியதற்காக கைது செய்யப்பட்டார். நாரணாபுரத்தில் அனிதா(36) என்பவர் கடை பின்புறம் பேக்கிங் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் 57 பெட்டிகளில் இருந்த ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News February 16, 2026

சதுரகிரி மலையேறிய பக்தர் மரணம்

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சென்ற தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரைச் சேர்ந்த சுடலை (60), மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக ஏறிய அவர் இரட்டை லிங்கம் அருகே மயங்கி விழுந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. சாப்டூர் காவல் நிலையம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!