News January 6, 2025

விண்வெளியில் துளிர் விடும் நம்பிக்கை!

image

இஸ்ரோ, PSLV C60 ராக்கெட் மூலம் டிசம்பரில் சாட்டிலைட்களை விண்ணில் ஏவியது. இந்த மிஷனில், விண்வெளியில் பயிர் வளர்வதற்கான சாத்தியங்களை ஆராயும் CROPS கருவியில், 8 காராமணி விதைகள் அனுப்பப்பட்டன. சில நாள்களுக்கு முன் அந்த விதைகள் முளைக்க தொடங்கியது. இந்நிலையில், அதில் இலைகள் துளிர் விடத் தொடங்கிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள இஸ்ரோ, இது ஒரு மைல்கல் சாதனை எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News February 4, 2026

கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை

image

மறைந்த லிபிய அதிபர் மும்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி (53) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜிந்தன் நகரில் உள்ள சைஃப் கடாஃபியின் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஓத்மன் SM-ல் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அரசுப் பதவிகளில் இல்லையென்றாலும், லிபியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.

News February 4, 2026

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா?

image

கடந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்ற அண்ணாமலை இம்முறை தொகுதி மாறி திட்டமிட்டுள்ளாராம். கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் நல்ல வாக்குகளை பெற்றதால், சிங்காநல்லூர், பல்லடம் அல்லது சூலூரில் போட்டியிட ஆலோசிக்கிறாராம். அதிமுக வாக்குகளும் கைகொடுத்தால் MLA ஆகிவிடலாம் என அண்ணாமலை நம்புகிறாராம்.

News February 4, 2026

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல படங்கள், வெப்சீரிஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன *பிரபாஸின் ‘ராஜாசாப்’ : பிப்.6, ஜியோ ஹாட்ஸ்டார் *சரத்குமாரின் ‘கொம்புசீவி’ : பிப்.6, டெண்ட்கொட்டா *மகேந்திரனின் ‘ நீலகண்டா’: பிப்.6, சன் நெக்ஸ்ட் *’பராசக்தி’: பிப்.7, ஜீ5 *ஷர்வானந்தின் ‘நாரி நாரி நடுமா முராரி ‘: பிப்.4, அமேசான் பிரைம் * ‘The Investigation of Lucy Letby’: பிப்.4, நெட்பிளிக்ஸ்

error: Content is protected !!