News January 6, 2025
ட்ரெண்டிங்கில் Lockdown

Lockdown என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இது குழந்தைகளை பெரியளவில் தாக்கும் என்பதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். ஒருவேளை கொரோனா போல், இந்த வைரஸும் பாதிப்பை ஏற்படுத்தினால், மீண்டும் லாக்டவுன் வரப்போவதாக நெட்டிசன்கள் lockdown என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
தினமும் AC-யில் தூங்குகிறீர்களா? அப்போ உஷார்!

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.
News September 13, 2025
பிக்பாஸ் 9வது சீசனுக்கு தேதி குறிச்சாச்சு!

தமிழ் பிக்பாஸின் 9-வது சீசன் அக்.5-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய சீசனைப்போல் இதனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அவரது புதிய கெட்டப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2026 பொங்கலுடன் இந்த சீசன் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்கு போகப் போறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?
News September 13, 2025
விஜய்யின் நாகை பரப்புரைக்கு அனுமதி இல்லை: போலீஸ்

நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு தவெகவினர் மனு அளித்திருந்தனர். ஆனால், அதே நாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி கொடுக்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.