News January 6, 2025
விஷாலுக்கு Bed Rest.. டாக்டர் பரிந்துரை!

மதகஜராஜா பட ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் மேடையில் பேசியது, அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அவருக்கு ஹை-டிகிரியில் காய்ச்சல் இருந்ததாக படக்குழு விளக்கமளித்தது. தற்போது அவருக்கு வைரல் பீவர் என அப்பல்லோ ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிகிச்சையும் முழுமையான பெட் ரெஸ்ட்டும் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Get Well Soon, Vishal!
Similar News
News September 13, 2025
விஜய் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படாது: திருமா

விஜய் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்காக வரும் லட்சக்கணக்கானோர் அரசியல் சக்திகளாக மாறுவார்கள் எனத் தெரிவித்த அவர், விஜய்க்காக திரண்டவர்கள் அப்படி இல்லை எனக் குறிப்பிட்டார். ஏதோ திட்டமிடப்பட்ட அஜெண்டாவிற்காக அவர் அரசியலுக்கு வந்திருக்கலாம் எனவும் திருமா தெரிவித்தார்.
News September 13, 2025
தினமும் AC-யில் தூங்குகிறீர்களா? அப்போ உஷார்!

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.
News September 13, 2025
பிக்பாஸ் 9வது சீசனுக்கு தேதி குறிச்சாச்சு!

தமிழ் பிக்பாஸின் 9-வது சீசன் அக்.5-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய சீசனைப்போல் இதனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அவரது புதிய கெட்டப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2026 பொங்கலுடன் இந்த சீசன் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்கு போகப் போறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?