News January 6, 2025
ஜன.1 புத்தாண்டில் சரிந்த பீர் விற்பனை

மதுபிரியர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பானங்களில் பீரும் ஒன்று. 2025 ஜன. 1இல் டாஸ்மாக்கில் 90,109 பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. 2024 ஜன.1இல் 93, 883 விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் இது 4.02% குறைவு. 2024 டிசம்பரிலும் பீர் விற்பனை 1.48% குறைந்துள்ளது. ஜன.1இல் நெல்லை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பீர் விற்பனை குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
Similar News
News January 20, 2026
திருப்பூர் அருகே சிறுமி விபரீத முடிவு

கே.ஆண்டிபாளையம் பகுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜகோபால்,தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சர்சனா (15), 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி சர்சனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த அவினாசிபாளையம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக GHக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
மைக் ஆஃப் செய்யப்படவில்லை: அமைச்சர் ரகுபதி

சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தும், அரசின் உரையை கவர்னர் வாசிக்காமல் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கவர்னர் வெளியேறிய உடனே 3 பக்க அறிக்கை வருகிறது என்றால் அது திட்டமிடப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 20, 2026
பொங்கல்.. டாஸ்மாக் வசூல் இவ்வளவு கோடியா?

பொங்கல் விடுமுறையான ஜன.14 – 18 வரையிலான 5 நாள்களில் ₹850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜன.14-ல் ₹217 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், திருவள்ளுவர் தினமான 16-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாள் மட்டும் ₹301 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. முன்னதாக, டாஸ்மாக் வசூலிலே திமுக அரசு சாதனை படைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.


