News January 6, 2025

மயானத்திற்கு சாலை இல்லாத கிராம மக்களின் அவலநிலை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழக்கோட்டையில் மயானத்திற்கு ரோடு வசதியில்லாததால் இறந்தவர் உடலை வயல்வெளியில் கிராமத்தினர் கொண்டு சென்றனர். கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் மழை நேரங்களில் நெல் வயல்களில் 3 கி.மீ தூரம் சகதிக்கு மத்தியில் இறந்தவர் உடலை கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக மயானத்திற்கு சாலை அமைத்துத்தர கிராம மக்கள் கோரிக்கையிட்டனர்.

Similar News

News February 2, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 2, 2026

ராம்நாடு: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

image

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

ராம்நாடு: கஞ்சா பதுக்கிய அண்ணன், தம்பி கைது!

image

உப்புளி அருகே மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பி வினோத் (33), தினேஷ் (30). இவர்கள் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் அவர்கள் வீட்டில் சோதனையிட்ட போது, பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

error: Content is protected !!