News January 6, 2025
முல்லை பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டர்

தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அணை அமைந்துள்ளதால் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.5) அணைக்கு மேல் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Similar News
News February 9, 2026
தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; மூதாட்டி படுகாயம்

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம திலகம்(61). இவர் நேற்று (பிப்.08) கார்த்திகேயன் என்பவரது ஆட்டோவில் சின்னமனூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றுள்ளார். ஆட்டோவை கார்த்திகேயன் அதிவேகமாக இயக்கிய நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம திலகம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.
News February 9, 2026
தேனி: சொந்த வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் 2600 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 1400 வீடுகள் காலியாக உள்ளது. வீடுகள் தேவைப்படுவோர் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி எஸ்.பி அலுவலகம் பின்புறம் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 9, 2026
தேனி: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜப்பன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவா் 2 தினம் முன்பு வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். நேற்று (பிப்.8) வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.


