News March 25, 2024

நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

சங்கரன்கோயிலிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன்,  திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர்
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Similar News

News September 26, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

இன்று (25.09.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலக சமூக ஊடகத்தின் வாயிலாக பகிரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

News September 25, 2025

வேளாண் வணிக திருவிழாவில் கலந்து கொள்ளலாம் – ஆட்சியர்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 27.09.2025 அன்று காலை 10:30 மணியளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் வணிகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.

News September 25, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8834 ஹெக்டர், சிறுதானியங்கள் 4365 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 592, கரும்பு 662 ஹெக்டர், எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர். பழங்கள் 9716 ஹெக்டேர், காய்கறிகள் 2582 ஹெக்டேர். வாசனைப் பயிர்கள் 497 ஹெக்டேர், மலைப்பயிர்கள் 13794 ஹெக்டேர். பூக்கள் 461 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

error: Content is protected !!