News January 6, 2025
ஆளுநர் உரையை வாசிக்கும் சபாநாயகர்

உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் அதனை சபாநாயகர் தானே வாசித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை ஆளுநர் உரையாக வாசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சபாநாயகர் அதனை தமிழில் வாசித்து வருகிறார்.
Similar News
News January 19, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன -18) இரவு 10 மணி முதல் இன்று காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 19, 2026
‘தெறி’ ரி-ரீலீஸ் மீண்டும் ஒத்திவைப்பா?

மோகன்.ஜி இயக்கியுள்ள ‘திரெளபதி 2’ ஜன.23-ல் ரிலீசாகிறது. அன்று ‘தெறி’ ரி-ரீலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களின் நலன்கருதி கலைப்புலி தாணு இம்முடிவை மாற்ற வேண்டும் என மோகன்.ஜி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தாணு ‘தெறி’ ரீ-ரிலீஸ் வெளியீட்டு முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், தெறி ரீ-ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
News January 19, 2026
ஆ.ராசாவுக்கு எதிராக விசிக.. சிக்கலில் கூட்டணி

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனை ‘சாதிக் கட்சி தலைவர்’ என ஆ.ராசா பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விசிகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘RSS கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும், 2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்கிறோம்’ என அவர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


