News January 6, 2025

ஆளுநர் வெளியேறியது குறித்து ராஜ் பவன் விளக்கம்

image

சட்டப்பேரவையில் உரையை தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மட்டும் இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் ராஜ்பவன் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய கீதத்துக்கு அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

10 வருஷம் கேரண்டி கொடுத்த சாலையின் இன்றைய நிலை

image

90 டிகிரி, கட்டிய சில மாதங்களில் இடிந்துவிழும் சில பாலங்கள், இன்றைய கட்டுமானத்தின் கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை இன்றும் கம்பீரமாக கனரக வாகனங்களை தாங்குகிறது. புனேவில் உள்ள ஜுங்லி மஹாராஜ் சாலை (JM Road), 1976-ல் Recando என்ற கம்பெனியால் கட்டப்பட்டு, 10 வருட உத்தரவாதத்தில் பொது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உங்கள் ஊர் சாலை எப்படி உள்ளது என்று கமெண்ட் பண்ணுங்க

News September 16, 2025

ஆசிய கோப்பை: இலங்கை வெற்றி

image

ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 68 ரன்களை விளாசினார். ஆனால், அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக, 18.5 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.

News September 16, 2025

இனி கண்ணாடி வேண்டாம்.. 2 துளி சொட்டு மருந்தே போதும்

image

தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க, பார்வைத்திறனுக்கேற்ற கண்ணாடிகள், கான்டக்ட் லென்சுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், ஒரு சொட்டு மருந்தை 2 துளிகள் போட்டால், அதன் மூலம் 2 வருடங்களுக்கு தெளிவான பார்வை கிடைப்பதாக டென்மார்க்கில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. Pilocarpine, Diclofenac ஆகியவற்றால் இந்த சொட்டுமருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கண் கண்ணாடிகளுக்கு குட் பாய் சொல்லலாம்

error: Content is protected !!