News January 6, 2025
அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆளுநர் உரையை வாசிப்பதற்கு முன்பே அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பத் தொடங்கிய அதிமுகவினர் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகை ஏந்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
சிவகாசி: அரிவாளால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மம்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் பேருந்தை மறித்து ஓட்டுநர் பார்த்திபனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஓட்டுநர் அளித்த புகாரில் முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 19, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News January 19, 2026
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.


