News January 6, 2025
கடலூரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News August 16, 2025
கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News August 16, 2025
இல.கணேசன் மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்

பண்ருட்டி எம்எல்ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இனிய நண்பரும், பழகுவதற்கு எளியவருமான இல.கணேசனின் மறைவு, அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
News August 16, 2025
கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

கடலூர் மக்களே, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், அவற்றை வரன்முறை செய்து கொள்ள அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <