News January 6, 2025
பேரணாம்பட்டு அருகே கன்று குட்டியை கொன்ற சிறுத்தை

பேர்ணாம்பட்டு அடுத்த ஓங்குப்பம் கிராமத்தில் சரளா என்பவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டியை நேற்று சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தெளிவாக பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க வலியுறுத்துகின்றனர்.
Similar News
News August 24, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.
News August 23, 2025
வேலூர்: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்

வேலூர் மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News August 23, 2025
வேலூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <