News January 6, 2025

இந்தியாவின் 2025-27 WTC அட்டவணை இது தான்

image

நடப்பு WTC தொடரில் இருந்து வெளியேறிய இந்தியாவின், அடுத்த WTC 2025-27 அட்டவணை வெளிவந்துள்ளது. ஜூனில் இங்கி. எதிராக 5 டெஸ்ட், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட், நவம்பரில் SAவிற்கு எதிராக 2 டெஸ்ட், ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட், 2026 அக்டோபரில் NZ க்கு எதிராக 2 டெஸ்ட், 2027 ஜனவரியில் 5 டெஸ்ட் (BGT தொடர்) ஆஸி.க்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

image

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

இடையூறுகளை தாண்ட வேண்டும்: பிரேமலதா

image

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் விதிக்காத நிபந்தனைகளை, தவெகவுக்கு விதித்ததாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதுபோன்ற பல இடையூறுகள், சவால்களை தாண்டித்தான் இலக்கை அடைய முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தபோதே விஜயகாந்தும் அரசியலுக்குள் நுழைந்து பல தடைகளை தாண்டியவர் என்றும் கூறியுள்ளார்.

News September 13, 2025

BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

image

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!