News March 25, 2024
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருவையாறு சாலையில் கூத்தூர் கிராமத்தின் அருகில் திருவையாறு ஏடிஎஸ்ஓ தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ்ணம் பேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.67080 ரொக்கத்தை கைப்பற்றி திருவையாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 6, 2026
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள முள்ளுக்குடி, வீரசிங்கம்பேட்டை, ஒக்கநாடு கீழையூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
தஞ்சை: மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வித்யாநகரைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா நேற்று தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவரைப் பிரிந்து காலணி கடை நடத்தி வந்த இவர், தன் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய நிலையில், பிற்பகலில் உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 5, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.5) இரவு 10 முதல், இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


