News March 25, 2024
நீலகிரி: காட்டு தீ – போராடிய தீயணைப்பு துறை

உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே மூலநகர் பகுதி காட்டில் இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .
Similar News
News September 19, 2025
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் 4 நாள் மூடல்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் செப்.23 முதல் 26 வரை 4நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பூங்காவின் மேம்பாட்டிற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
News September 19, 2025
நீலகிரி: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

நீலகிரி மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News September 19, 2025
நீலகிரி: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <