News March 25, 2024
நாகை: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

நாகை மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்சிடம் வழங்கினார். இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், அகஸ்டின், அற்புதராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 9, 2025
நாகை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

நாகை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
நாகை: பயணிகள் ரயில் ரத்து!

திருவாரூா் அருகே குளிக்கரை ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு நாகை வழியாக செல்லும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (76819) டிச.12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் – தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
News December 9, 2025
நாகை: குட்கா கடத்தல் கும்பல் கைது

நாகை வெளிப்பாளையம் சிவன் கீழவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காா்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார், காரில் சோதனை செய்த போது, 11 மூட்டைகளில் 128 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.


