News January 5, 2025

BREAKING: கங்கை அமரன் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

தமிழில் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் கங்கை அமரன். இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான அவர், பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். சிவகங்கை அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கங்கை அமரன் உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

RECIPE: ஹெல்தியான கம்பு சோயா தோசை!

image

கம்பு சோயா தோசை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➔கம்பு, சோயா, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசி ஆகியவற்றை தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
➔ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து கொள்ளவும்.
➔ மாவை 8 மணிநேரம் புளிக்க வைத்து, தோசை செய்து சாப்பிட்டால், ஹெல்தியான கம்பு சோயா தோசை ரெடி. SHARE IT.

News September 13, 2025

ரயிலில் சீட் பிடித்தால் குற்றம்: இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

image

ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசுவது உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதேபோல், சென்னை மின்சார ரயில்களில் சீட் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், சில முக்கிய எச்சரிக்கைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். உங்கள் ரயில் பயணத்தில் ஏற்பட்ட சிரமத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 13, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

தங்கம் விலை இன்று(செப்.13) சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,220-க்கும், சவரன் ₹81,760-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹2,160 உயர்ந்த நிலையில், ₹160 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹143-க்கு விற்பனையாகிறது. நாளை (ஞாயிறு) தங்கம் விலையில் மாற்றம் இருக்காது என்பதால் 2 நாள்களுக்கு இதே விலை நீடிக்கும்.

error: Content is protected !!