News January 5, 2025
வருகிற 10ஆம் தேதி ரேஷன் கடைகள் உண்டு.. மறக்காதீங்க

பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவதற்காக விடுமுறை நாளான கடந்த 3ஆம் தேதி (வெள்ளி) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதேபோல், பொங்கல் தொகுப்பை வழங்குவதற்காக விடுமுறை நாளான வரும் 10ஆம் தேதியும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் உண்டு. எனவே டோக்கனில் குறிப்பிட்டபடி அன்று பொங்கல் தொகுப்பை மக்கள் வாங்கலாம்.
Similar News
News September 13, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(செப்.13) சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,220-க்கும், சவரன் ₹81,760-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹2,160 உயர்ந்த நிலையில், ₹160 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹143-க்கு விற்பனையாகிறது. நாளை (ஞாயிறு) தங்கம் விலையில் மாற்றம் இருக்காது என்பதால் 2 நாள்களுக்கு இதே விலை நீடிக்கும்.
News September 13, 2025
NDA கூட்டணி ஆட்சியே நோக்கம்: நயினார்

NDA கூட்டணி ஆட்சிதான் தங்களது நோக்கம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம் என்ற அவர், TTV, OPS ஆகியோர் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டு டெல்லி சென்று திரும்பிய நிலையில், நயினாரின் இந்த பேச்சு பேசுபொருளாகியுள்ளது. மீண்டும் ஒன்றிணையுமா NDA கூட்டணி?
News September 13, 2025
ரேஷன் அட்டை.. காலை 10 மணிக்கு தயாரா இருங்க

TN-ல் இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இங்கே சென்று ஒரே நாளில் தங்கள் வேலையை முடித்து கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.