News January 5, 2025
ஆரம்பத்திலேயே திமுகவுக்கு எதிராக குரல்

CPI (M) புதிய மாநிலச் செயலாளராக தேர்வான உடனே திமுகவுக்கு எதிராக பெ.சண்முகம் கருத்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், திமுக வெளிச்சத்தில் சிபிஎம் எப்போதும் இருந்ததில்லை. அப்படி கூறுவது பொருத்தமற்றது. மக்கள் பிரச்னைக்காகவும், மதவெறி சக்திகளை ஒழிக்கவும் தெருவில் இறங்கிப் போராடுவோம். எங்களின் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.
News September 15, 2025
பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
News September 15, 2025
BREAKING: 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம்

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு CBSE பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும். மாதாந்திர தேர்வு, செயல்முறை தேர்வு, வருகைப் பதிவு ஆகியவை உள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.