News January 5, 2025

சாய்ந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்கிடுக: இசக்கி சுப்பையா

image

அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அரிகேசநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் வாழைகள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் நலன் கருதி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் காவல் சரகம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. எனவே, இரவில் காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 16, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்தன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News November 16, 2025

நெல்லை: மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

image

நெல்லை மக்களே, வடகிழக்கு பருவமழை கராணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ 17) தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!