News March 25, 2024

திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது சேலம் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Similar News

News April 13, 2025

கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்

News April 12, 2025

தோஷம் நீக்கும் பக்தஜனேஸ்வரர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ளது பக்தஜனேஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் சிவன் சுயம்புவாக காட்சி தரும் நிலையில், இங்கு வந்து வழிபட்டால் எத்தகைய தோஷமாயினும் அது எளிதில் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!