News January 5, 2025
புதிய EV ஸ்கூட்டர்களுடன் களமிறங்கிய Ather

2025 தொடங்கியதும் EV மார்க்கெட்டில் முதல் ஆளாக களமிறங்கியுள்ளது Ather. தனது 450X மாடல் EV பைக்குகளை மாற்றியமைத்து 450 சிரீஸ் வெளியிட்டுள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், வேகத்தை குறைக்க ரிவர்ஸ் ஆக்சலேட்டு, அதிகப்படியான ரேஞ்ச் என மாற்றங்கள் செய்திருக்கிறது. Google Maps, Alexa, WhatsApp Notification என டெக்னலாஜியாகவும் அட்வான்ஸ் ஆகியுள்ளது. 450 ஸ்கூட்டர் ரூ.1,29,999 (Ex. Showroom) முதல் கிடைக்கிறது.
Similar News
News September 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 457 ▶குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். ▶பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
News September 13, 2025
மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை: ஆதவ் அர்ஜுனா

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தால் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1967-ல் சாமானிய புரட்சி, 1977-ல் சரித்திர புரட்சி என்ற வரிசையில் 2026-ல் விஜய் தலைமையில் தமிழகம் ஜனநாயக புரட்சியை சந்திக்கும் என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 13, 2025
டிவி பார்க்கும் போது சாப்பிட்டா இவ்வளவு பிரச்னையா!

★டிவியை பார்க்கும் போது கூடுதலாக சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ★அவ்வாறு சாப்பிடும்போது ‘போதும்’ என்று மூளை சமிக்ஞை செய்யும். ★ஆனால், கவனம் முழுவதும் டிவி திரையில் இருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணர முடியாமல் போகும். ★இதனால் விரைவாக சாப்பிட நேரிடும். ★இதன் காரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.