News March 25, 2024
62 அடியாக குறைந்த நீர்மட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது இந்த நிலையில் இன்று நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.19 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 462 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
Similar News
News April 10, 2025
இன்றைய தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News April 10, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 10, 2025
தேனியில் நாளை கொட்டப் போகும் மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.