News March 25, 2024
அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஷ் முன்னிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியின் ஜீ.சுர்சித் சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக அவைத்தலைவர் ஜீவானந்தம்,
அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன், தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன், எஸ்டிபிஐ, திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஜிஸ் உடன் உள்ளனர்.
Similar News
News April 7, 2025
நாகையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 7, 2025
நாகை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை SHARE செய்யவும்
News April 7, 2025
நாகை: தன்னார்வலர்களை அழைக்கும் ஆட்சியர்

நம்ம நாகப்பட்டினம் நம்ம திருவிழா நிகழ்ச்சிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உற்சாகமாக நேரலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.