News January 4, 2025
மாரத்தான் போட்டி: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி, ஜன.5ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை அனுமதி இல்லை. போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. எல்.பி. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்களுக்கு பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதி இல்லை. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 27, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இன்று (ஆக.27) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பண்டிகை நாளான இன்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
News August 27, 2025
சென்னை: லஞ்சம் கேட்டால்.. உடனே CALL பண்ணுங்க

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை spnrdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 044-22321090, 044-22310989 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.
News August 27, 2025
சென்னை: அரசின் முக்கிய எண்கள்

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- 044-28364951, அரசு பொது மருத்துவமனை- 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHAR பண்ணுங்க.