News January 4, 2025

சென்னைக்கு வருகிறது ‘ஏர் டாக்சி’!

image

சென்னையில் ‘ஏர் டாக்சி’ எனப்படும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த TN அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகரத்திற்குள் வான்வழியாக விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு அம்சம், வழிகாட்டு நெறிமுறைகளை போயிங் நிறுவனத்துடன் இணைந்து அரசின் டிட்கோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

சோஷியல் மீடியாவில் இருந்து விலகிய அனுஷ்கா

image

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். நாம் உண்மையில் தொடங்கிய இடத்திற்கு பயணிக்க உள்ளதாகவும், விரைவில் நல்ல கதைகளுடனும், கூடுதல் அன்புடனும் சந்திக்கிறேன் என்றும் அவர் தனது X, இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான ‘காட்டி’ படம் படுதோல்வி அடைந்ததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News September 12, 2025

ACயால் மின் கட்டணம் உயர்கிறதா?

image

வீட்டில் குளுகுளுவென ஏசியில் இருக்க வேண்டும் என ஆசைப்படும் மக்கள் மின் கட்டணம் வரும் போது ஷாக் ஆவது வழக்கம்தான். ஆனால், சில டிரிக்ஸ் மூலம் மின் கட்டணம் அதிகரிப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதை போட்டோஸாக மேலே தொகுத்துள்ளோம், ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News September 12, 2025

இன்றே கடைசி: மாத சம்பளம் ₹29,500

image

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 515 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஐடிஐ படித்த, 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC-க்கு 3, SC/ST-க்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ₹29,500 முதல் ₹65,000 வரை. எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!