News January 4, 2025
டெல்லியில் கடும் பனி மூட்டம்

தேசிய தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் எதிரில் உள்ளவர்களை பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 470 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு சாலைகளும் தரிசாக மாறிவிட்டன.
Similar News
News September 15, 2025
முதல்வரிடம் மக்கள் கொடுத்த 9,391 மனுக்களின் நிலை என்ன?

மாவட்டங்களில் நடந்த ஆய்வு கூட்டங்களில், முதல்வரிடம் பொதுமக்கள் நேரடியாக கொடுத்த 9,391 மனுக்களில், இதுவரை 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண உயரதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், 5,570 மனுக்கள் தொடர்பான பணிகள் வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.
News September 15, 2025
விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: வைகோ

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக, அவரை காண மக்கள் கூடுவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.