News January 4, 2025
மாதம் ரூ.1,000… ஜன. 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

9-12 வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 வழங்குகிறது. இதற்காக தேசிய வருவாய் தேர்வு எனும் தேர்வை 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்குகிறது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வருகிற 27ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News September 12, 2025
நேபாளத்தின் நிலைக்கு காங்கிரஸே காரணம்: BJP

நேபாளம், இந்தியாவுடன் இருந்திருந்தால், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியிருக்கும் என பிஹார் DCM சாம்ராட் செளத்ரி கூறியுள்ளார். நேபாளத்தை காங்., இந்தியாவிலிருந்து பிரித்ததே, தற்போதைய நேபாளத்தின் அசாதாரண நிலைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிஹார் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு சாம்ராட், அண்டை நாடுகளுக்கு சென்று, புராண தவறுகளை சரிசெய்யலாம் என காங்., தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
News September 12, 2025
வடசென்னை யூனிவர்சில் சாய் பல்லவி?

STR- வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துவிட்டார். அப்படத்தின் வடசென்னை யூனிவர்சில் உருவாகும் இந்த படத்தில் STR-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் பாவக்கதைகள் வெப் தொடரில் சாய் பல்லவி நடித்திருந்தார். STR- சாய் பல்லவி காம்போ எப்படி இருக்கும்?
News September 12, 2025
BREAKING: புதிதாக தொடங்குகிறார் அண்ணாமலை

இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில் முதலீட்டு நிறுவனம் தொடங்கும் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். <<17687290>>விவசாய நிலம் வாங்கியது<<>> தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அவர், மத்திய அரசின் PMEGP திட்டத்தில் பால் பண்ணை அமைக்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சர்ச்சைகளுக்கு எல்லாம் அடுத்தாண்டு தனது IT பதில் சொல்லும் என்றார்.