News January 3, 2025

அவதூறாக பேசிய நடத்துனருக்கு ரூ.15,000 அபராதம்

image

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜிப்ரில் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி வருவதற்காக அரசு விரைவு பேருந்தில் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். அப்போது அவதூறாக பேசிய நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் நடத்துனருக்கு 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News August 22, 2025

BREAKING: நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா

image

நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

News August 22, 2025

நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

image

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News August 22, 2025

நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

image

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,900 – ரூ.1,31,500 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

error: Content is protected !!