News January 3, 2025

தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை & ரூ.20 லட்சம் கொள்ளை

image

நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொழிலதிபர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, வீட்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் காவலாளியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News

News August 28, 2025

சென்னையில் வேலை: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை.29-ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 10th, 12th, ஐடிஐ, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 28, 2025

சென்னையில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (28.08.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. மணலி, மாதவரம், இராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 10 மண்டலங்களின் 10 வார்டுகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 28, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட். 27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!