News March 25, 2024
அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் தனது வேட்பு மனுவினை இன்று தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04151-295422) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962551>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து கல்வராயன் மலை பகுதிக்கு வெள்ளி மலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கல்வராயன் மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.