News January 3, 2025
விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் அமைச்சர்

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழா விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை ஜெயஜோதி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News August 22, 2025
ராணிப்பேட்டை: வேலைவாய்ப்பு அலுவுலகத்தில் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நாளை ஆகஸ்ட் 23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கான மாதிரி போட்டி தேர்வு நடைபெறுகிறது. இதில் உரிய சான்றுகளுடன் புகைப்படம் 2 ஆதார் அட்டை நகல் உடன் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
ராணிப்பேட்டை: கடன் தொல்லை தீர இங்கு போங்க

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்வெண்பாக்கத்தில் ஸ்ரீ சுதந்திர லக்ஷ்மி நாயகி சமேத யுக நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து சென்றால் திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
ராணிப்பேட்டை காவல்துறை எஸ்.பி நடவடிக்கை

இன்று ஆகஸ்ட் 22 ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆறு உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி திமிரி, ஆற்காடு, பாணாவரம், சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டு உள்ளார்.