News January 3, 2025
பல வங்கிகளில் லோன் வாங்குவோரா நீங்கள்?

லோன் பெற்றோர் குறித்த தகவல்களை கடந்த ஆண்டு வரை மாதம் ஒரு முறை RBIக்கு ரிப்போர்ட் செய்து வந்தன வங்கிகள். இதனால், ஒரே மாதத்தில் பல்வேறு வங்கிகளில் தனி நபரால் பெர்சனல் லோன் பெற முடியும். இதனை தடுக்கும் விதமாக ரிப்போர்ட்டிங் நாளை 15ஆக குறைத்திருக்கிறது RBI. இதனால், நீங்கள் லோன் வாங்கிய தகவல் 15 நாள்களில் மற்ற வங்கிகளுக்கு அப்டேட் ஆகிவிடும். இதன் மூலம் multi-loan குறையும் என்கிறது RBI.
Similar News
News September 15, 2025
உலகின் பழமையான டாப்-10 கட்டுமானங்கள்!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பலவற்றை பார்த்து நாம் வியந்து போகிறோம். ஆனால், அப்படியான கட்டடக்கலை நேர்த்தியுடன் பிரமாண்டமான கட்டுமானங்கள் உருவாவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் பெரும் கட்டுமானங்களை உருவாக்கி வந்துள்ளனர். பலருக்கும் தெரியாத உலகின் டாப் 10 பழமையான கட்டுமானங்களின் போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்கள்.
News September 15, 2025
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும். அதற்கு நிறைய பணம் தான் வேண்டும் என்றில்லை. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள், மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி?
News September 15, 2025
இந்தி மற்ற மொழிகளின் நண்பன்: அமித்ஷா

இந்தியை மற்ற மொழிகளுக்கு போட்டியாக பார்க்கக்கூடாது என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி மற்ற மொழிகளின் எதிரி அல்ல, நண்பன்தான் என்றும் கூறினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும், அவர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.