News March 25, 2024
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி,அதிமுக நிர்வாகிகள்,தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News May 7, 2025
மாவட்ட ஆட்சியர் குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாற்றம் சாதிச்சான்று பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகளை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை அணுகும்போது அலுவலகத்திற்கு வெளியே அரசு சலுகைகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து பணங்களை பறிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த (9791322979) தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
News May 7, 2025
மாவட்டத்தில் 193 காவலர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்.ஐ பார்த்திபன் விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சாத்தூர் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம் புதுப்பட்டி உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 193 பேரை எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News May 7, 2025
விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே.4ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3012 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 812 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 629 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.