News January 3, 2025
விமான நிலையத்தில் பணிபுரிவதற்கு பயிற்சி-ஆட்சியர் தகவல்

“சிவகங்கை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தினால் தாட்கோ சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று(ஜன.2) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
சிவகங்கை இளைஞர்களை சுட்டு பிடித்த போலீஸ்

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் துடியலூர் அருகே சிவகங்கையை சேர்ந்த குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சம்பவ இடத்தில் தடையவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
News November 4, 2025
சிவகங்கை: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 4, 2025
சிவகங்கையில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப 10.10.2025-ம் தேதி முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025-ம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மேற்படி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


