News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, விழுப்புரம் (தனி) எம்பி தொகுதியில் விசிகவின் ரவிக்குமார், அதிமுகவின் பாக்யராஜ், பாமகவின் முரளி சங்கர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.

Similar News

News September 6, 2025

விழுப்புரம்: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளம் <<>>மூலம், உங்கள் செல்போன் தொலைந்தது குறித்துப் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும்போது, செல்போன் எண், IMEI எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட வேண்டும். உங்கள் போன் தானாகவே அணைக்கப்பட்டுவிடும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

News September 6, 2025

விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

அம்பேத்கர் விருது: விழுப்புரம் ஆட்சியர் செய்தி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!