News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News October 20, 2025

தேனி: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

image

தேனி அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேனி முன்னாள் எம்.பி

image

வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கிய நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார்.

News October 19, 2025

தேனியில் 1 ரூபாய்க்கு சிம் கார்டு.!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் 1 ரூபாய்க்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உடன் கூடிய இலவச சிம் கார்டை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை 15.11.2025 வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!