News January 3, 2025
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

ஜனவரி 4, 7,9,11 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை இதுவரை சென்ற வழித்தடத்திலும், அதற்கு பின்பு மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக மயிலாடுதுறை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் இச்செய்தியை கவனித்து பயணத்தை மேற்கொள்ளவும்.
Similar News
News November 8, 2025
தென்காசி: 90 வயது பாட்டிக்கு ரேடியோ கிடைத்தது

புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆதிலட்சுமி தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர் இவரது ரேடியோவை திருடியதால் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் <<18188698>>மனுஅளித்தார்<<>>. இதை அறிந்த தனியார் எப்.எம் நிர்வாகம் புதிய ரேடியோ வழங்கியது. ரேடியோவை பெற்ற ஆதிலட்சுமி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
News November 8, 2025
தென்காசி : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
தென்காசி நகராட்சி புதிய கட்டிடம் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய காய்கறி சந்தையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் நவம்பர் 18ம் தேதி முதல் ஏலம் / ஒப்பந்த புள்ளி நடைபெற உள்ளது. இதன் மூலம் கடையை ஏலம் எடுக்க விரும்புவர்கள் 4 லட்சம் வைப்புத்தொகை கொடுத்து ஏலத்தில் கலந்து கொள்ள நகராட்சி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 18 முதல் நவம்பர் 27 வரை நகராட்சி அலுவலகத்தில் சென்று ஏல ஒப்பந்த படிவத்தை செலுத்திக் கொள்ளலாம். SHARE!


