News January 3, 2025

இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

image

நடப்பாண்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹249.76 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை TN அரசு வழங்க உள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதில், பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

Similar News

News January 18, 2026

மயிலாடுதுறை: சர்க்கரை ஆலையில் திருடியவர் கைது

image

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. ஆலையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து இரும்பு பொருட்களை திருடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இரும்பு பொருட்களை திருடிய தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விஜயபாலன் (46) என்பவரது கைது செய்து, ரூ.10,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News January 18, 2026

பாஜக மூத்த தலைவர் ராஜ் கே.புரோஹித் காலமானார்

image

BJP மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநில EX அமைச்சருமான ராஜ் கே.புரோஹித்(70) உடல் நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்ட இவர், அமைச்சர், பாஜகவின் தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் இவரது மகன் ஆகாஷ் வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்பை பார்ப்பதற்குள் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 18, 2026

டிரம்ப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!

image

காசாவை நிர்வகிக்க டிரம்ப் அமைத்துள்ள <<18870153>>அமைதி வாரியத்திற்கு<<>> இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த குழுவை அறிவிக்கும் முன் USA தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், தங்கள் கொள்கைகளுக்கு இது எதிரானது எனவும் என இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குழுவில் துருக்கி அமைச்சர் இடம்பெற்றிருப்பதே எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேல்-USA உறவில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!