News January 3, 2025
தூங்கும் போது போனை எங்கு வைக்கலாம்?

பெரும்பாலானோர் தூங்கும் போது போனை தலையணைக்கு அடியிலோ, அல்லது கைக்கு எட்டும் தூரத்திலோ வைக்கின்றனர். ஆனால் இது உடல் நலத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பக்கத்து ரூமில் போனை வைத்துவிட்டு தூங்கவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாகவே போனை ஆஃப் செய்ய வேண்டும் எனவும், நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், போனை Flight Modeல் போடுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Similar News
News September 12, 2025
ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.
News September 12, 2025
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
News September 12, 2025
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப முடிவு: உத்தவ் சிவசேனா

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை ஏற்க முடியாது என உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது. போட்டி நடக்கும் நாளில் ‘சிந்தூர் ரக்சா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த போவதாகவும், அதில் பங்கேற்கும் பெண்கள் PM-க்கு குங்குமம் அனுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.