News January 3, 2025
IND vs AUS: 5ஆவது டெஸ்ட் எப்போது தொடங்கும்?

IND vs AUS மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை அதிகாலை 5 மணிக்கு சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. டிவியில் Star Sports சேனலிலும், ஸ்ட்ரீமிங் தளத்தில் Disney+Hotstarலும் பார்க்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல, இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1-2 என்ற அளவில் ஆஸி., அணி முன்னிலையில் உள்ளது.
Similar News
News September 12, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 36 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 88.47 ஆக குறைந்துள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வரி பிரச்னை மற்றும் டாலரை வலுப்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளால் இந்த வீழ்ச்சி கண்டிருப்பதாகவும், இதனால் ஏற்றுமதி துறை கடும் பாதிப்பை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும்.
News September 12, 2025
Sports Roundup: கவுன்டி கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர்

* இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாட வாஷிங்டன் சுந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். *ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள வீரரை இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வீழ்த்தினார். * புரோ கபடி லீக்கில் தபாங் டெல்லி 38-28 என்ற கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது * தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத்திற்கும் அணி நிர்வாகத்திற்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
News September 12, 2025
அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தாரா? இல்லையா?

டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற செங்கோட்டையன், அரசியல் சூழ்நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக கூறினார். ஆனால் பாஜக தரப்பு, இதில் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது. அமித்ஷாவை சந்தித்தாக அவர் சொல்லிக்கொள்வதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என வானதி ஸ்ரீனிவாசன், கஸ்தூரி தெரிவிக்கின்றனர். உண்மை என்ன?