News January 3, 2025
சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 16, 2025
சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News October 16, 2025
சென்னை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, ‘<
News October 16, 2025
சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு தயார்!

வடகிழக்கு பருவமழைக்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்கள், 193 நிவாரண மையங்கள் மற்றும் 150 சமையல் கூடங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளதகவும், மழைநீர் வடிகால்களில் பராமரிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உட்பட 22,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.