News January 3, 2025

கோழைத்தனமான தாக்குதல்- மோடி கண்டனம்

image

US நியூ இயர் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். நியூ ஆர்லியன்ஸில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது பிரார்த்தனைகள் அவர்களுக்காக உண்டு. இந்த சோகத்திலிருந்து குணமடைய போதிய வலிமை கிடைக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் திரள் மீது வாகனத்தை மோதி துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஈடுபட்டார்.

Similar News

News September 14, 2025

‘நாங்க சாகப் போறோம்.. SORRY’

image

‘நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். மன்னித்துவிடுங்கள். உங்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சாவுக்கு யாரும் காரணமில்லை’. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சாக்‌ஷி சாவ்லா(37), மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனுக்கு கடைசியாக எழுதிய வரிகள் இவை. மகனின் நிலையால் ஏற்பட்ட மன அழுத்தமே 2 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. So Sad.

News September 14, 2025

நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

image

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

News September 14, 2025

BREAKING: அசாமில் நிலநடுக்கம்

image

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

error: Content is protected !!