News January 2, 2025
இறந்தவருக்கு உயிர் கொடுத்த Speed Breaker!

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாண்டுரங் (65). கடந்த டிச.16ல் மாரடைப்பு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறவே, சடலத்தை ஆம்புலன்ஸில் வைத்து கொண்டுவந்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது, அவரது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளது. இதையடுத்து வேறு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிர்பிழைத்து வந்துள்ளார்.
Similar News
News September 14, 2025
‘நாங்க சாகப் போறோம்.. SORRY’

‘நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். மன்னித்துவிடுங்கள். உங்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சாவுக்கு யாரும் காரணமில்லை’. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சாக்ஷி சாவ்லா(37), மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனுக்கு கடைசியாக எழுதிய வரிகள் இவை. மகனின் நிலையால் ஏற்பட்ட மன அழுத்தமே 2 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. So Sad.
News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 14, 2025
BREAKING: அசாமில் நிலநடுக்கம்

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.