News January 2, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான, இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி, காலை 10 மணிக்கு, கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்க உள்ளது. பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களை பெற, அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல், 5 மணி வரை, அல்லது 04272401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

சேலம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 27, 2025

ஆத்தூர் அருகே பயங்கரம்: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!

image

சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை பகுதியில் கிழங்கு அறுவடைக்கு வந்த கடலூர் மாவட்ட தொழிலாளர்கள் 20 பேர், அப்பகுதியில் இறந்த ஆட்டை சமைத்து சாப்பிட்டனர். இதில் 18 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!