News January 2, 2025
₹1000 வேண்டாம், பாதுகாப்புதான் வேண்டும்: Sowmiya

அண்ணா பல்கலை.விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் கைதான சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் பேசிய செளமியா, மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; பெண்கள் பயத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு அரசு கொடுக்கும் ₹1000 வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால்கூட அரசு கைது செய்கிறது என்றார்.
Similar News
News November 1, 2025
ஹாஸ்பிடலில் இருந்து ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆனார்

சிட்னி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். சில நாள்கள் சிட்னியில் தங்கி சிகிச்சை எடுக்கவுள்ள ஷ்ரேயஸ், விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ODI-யில் கேட்ச் பிடிக்க முயன்ற போது, அவரது மண்ணீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, ICU-வில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
துரோகத்திற்கு EPS-க்கு நோபல் பரிசு தரலாம்: KAS

துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்காக கிடைத்த பரிசு தான், கட்சியில் இருந்து நீக்கம் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், துரோகம் செய்வதில் இபிஎஸ்-க்கு நோபல் பரிசு தரலாம் என்றும் கடுமையாக சாடினார்.
News November 1, 2025
BREAKING: கண்ணீர் விட்ட செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். MGR, ஜெயலலிதா என அனைத்து தலைவர்களிடமும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.


